Thursday, 29 March 2012
பெர்சனாலிட்டி”யை வளர்த்துக் கொள்வது எப்படி?
சிவில் சர்வீசஸ் தேர்வு மற்றும் எல்லா போட்டித் தேர்வுகளிலும் இடம்பெறும் ‘நேர்முகத்தேர்வு’ (Interview) எனப்படும் “பெர்சனாலிட்டி டெஸ்ட்” என்னும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும் ஒரு “விறுவிறு” தொடர் இது-
2. முக்கிய பண்புகளின் தொகுப்பு
சிவில் சர்வீசஸ் தேர்வில் 3 முக்கிய தேர்வுகள் இடம் பெறுகின்றன. அவை-
அன்று-
`பெர்சனாலிட்டி டெவலெப்மென்ட்' என்று அழைக்கப்படும் `ஆளுமைத் தன்மை வளர்ச்சி' என்னும் தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தேன். பயிற்சியின் தொடக்கமாக நான் மாணவர்களிடம் கேட்ட கேள்வி இதுதான், `பெர்சனாலிட்டி' என்றால் என்ன?
சிலர் `அழகு' என்றார்கள். இன்னும் சிலர் `நல்ல உடலமைப்பு' என்றார்கள். வேறு சிலர் `நல்ல குணங்கள்' என்றும் சொன்னார்கள். `பொதுவாழ்வில் பிரபலமாக இருப்பவர்களை நல்ல பெர்சனாலிட்டி உள்ளவர்கள் என்று கூறலாம்' என்றும் சிலர் கருத்து தெரிவித்தார்கள்.
இப்போது `பெர்சனாலிட்டி' என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொல்வது முக்கியமாகி விட்டது.
`பெர்சனாலிட்டி' என்னும் வார்த்தைக்கு தெளிவான அர்த்தத்தை தெரிவிக்காமல் `பெர்சனாலிட்டி டெவலப்மெண்ட்' என்னும் பயிற்சி வகுப்பை எப்படி தொடர்ந்து நடத்துவது?
எனவே பயிற்சி வகுப்பிலுள்ள அனைவருக்கும் ஒரு கேள்வியைக்கொடுத்து, அந்தக் கேள்விக்கு பதில் எழுதச்சொன்னேன். `உங்களுக்குப் பிடித்த பெர்சனாலிட்டி யார்?, அவரை சிறந்த `பெர்சனா
லிட்டி' உள்ளவராக நீங்கள் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?' இதுதான் அந்தக் கேள்வி. பத்து நிமிடத்திற்குள் விரிவான பதில் தரவேண்டும் எனக் கேட்டிருந்தேன். அவர்கள் எழுதித்தந்த பதில்கள் பல. அவற்றில் சில...
சச்சின் டெண்டுல்கர், இசைஞானி இளையராஜா, கவிஞர் வைரமுத்து, நடிகர் சூர்யா, பலசரக்குக் கடை பாண்டியன் அண்ணாச்சி... இப்படி பலபேரைத் தேர்ந்தெடுத்து சிறந்த பெர்சனாலிட்டி என பதில் தந்திருந்தார்கள்.
சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்திறன் என்னைக் கவர்ந்தது. இதனால் அவரே சிறந்த `பெர்சனாலிட்டி' என்றார் ஒருவர். இளையராஜாவின் இனிய இசை எனக்குப் பிடித்தது. மிகச்சிறந்த
இனிய பாடல்களை உருவாக்கும் சிறப்புத் திறன் கொண்டவர் இளையராஜா. எனவே எனது `மரியாதைக்குரிய பெர்சனாலிட்டி' இளையராஜா தான் என்பது இன்னொருவரின் கருத்து.
வைர வரிகளைத் தந்து என்னை வசப் படுத்திய கவிஞர் வைரமுத்து `சூப்பர் பெர் சனாலிட்டி' கொண்டவர் என்றார்.
நடிகர் சூர்யாவின் அபார நடிப்புத்திறமை என்னைக் கவர்ந்தது. அவரை சிறந்த பெர்சனாலிட்டியாக தேர்ந்தெடுக்கிறேன் என்றார் மற்றவர்.
எங்கள் ஊர் சிறிய கிராமம். இங்கு பல சரக்குக்கடை வைத்திருக்கும் பாண்டியன் அண்ணாச்சி எனது மனதை ஈர்த்த மனிதர். அழுக்கு பனியன் போட்ட உடம்பு, சிரித்த தாடியுடன் கூடிய முகம், சுறுசுறுப்பு கொண்ட செயல்பாடு, இனிமையாள் பழகும் நல்ல இதயம், இது தான் பாண்டியன் அண்
ணாச்சி. எனவே என் அன்புக்குரிய பெர்சனாலிட்டி இவர்தான் என்றார் வேறு ஒருவர். வகுப்பில் அனைவருக்கும் கேட்கும்படி இந்தப் பதில்களை உரத்த குரலில் வாசித் தேன்.
பயிற்சியில் கலந்துகொண்ட ஒருவர் எழுந்தார்
. `சார் எங்களில் ஒருவர் சிறந்த விளையாட்டு வீரரை நல்ல பெர்சனாலிட்டி என்கிறார். இன்னொருவர் இசையமைப்பாளரை சிறந்த பெர்சனாலிட்டி என்று சொல்கிறார். கவிஞரையும், நடிகரையும், பல சரக்குக்கடைக்காரரையும் சூப்பர் `பெர்சனாலிட்டி' என்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர்களை தேர்ந்து எடுக்கும் போது பொதுவாக `சிறந்த பெர்சனாலிட்டி கொண்டவர்' என யாரை அழைக்கலாம்? அதற்கான தகுதி என்ன?' என கேள்விக் கொக்கிகளை அடுக்கினார்.
நான் மீண்டும் ஒருவர் எழுதிய பதிலை உரத்த குரலில் விளக்க ஆரம்பித்தேன்.
`உங்களில் ஒருவர் தனது அம்மாதான் தனக்குப் பிடித்த `பெர்சனாலிட்டி' என பதில் எழுதியிருக்கிறார். அதற்குக் காரண த்தையும் எழுதியிருக்கிறார்.
`எனது அம்மா ஒரு உழைப்பாளி, எப்போது பார்த்தாலும் வீட்டின் வளர்ச்சிக்காகவே உழைப்பார்கள். அன்பான இதயம் கொண்ட எனது அம்மா எல்லோரிடமும் மிகவும் அன்பாக பழகுவார்கள். குடும்ப
உறுப்பினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் ஆகியவர்களுக்காக தினமும் `பிரார்த்தனை' செள்வதும் எனது அம் மாவின் சிறந்த குணங்களில் ஒன்றாகும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment