Tuesday, 3 April 2012

அல்பேனியா-பழமொழிகள்

• ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.

• ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.

• ஒழுக்கத்தைப் பறிகொடுத்துக் கிடைக்கம் இலாபத்திற்கு ‘நஷ்டம்’ என்று பெயர்.

• ஒரு கையைத் தட்டினால் ஓசை எழாது.

• ஏகாந்தம் என்பது இறைவனுக்குப் பொருந்தும்.

• கசப்பான சொல் வெறுப்பை வளர்க்கிறது.

• கத்தும் பூனை எலியைப் பிடிக்காது.

• சிறந்த பொருளை சுருக்கமாக மனதில் பதியும் வண்ணம் கூறுவதே பழமொழயின் தன்மை.

• பழமொழிகளைப்போல் வேறெதுவும் நினைவில் பதிவதும் நீண்ட நாள் தங்குவதும் இல்லை.

• பணத்தை இழந்தால் குறைந்த நஷ்டம். நேரத்தை இழந்தால் எல்லாமே நஷ்டம்.

• துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால், அது உனக்குக் கற்பித்த பாடத்தை மட்டும் மறந்துவிடாதே!

• நாக்கில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்க வல்லது.

No comments:

Post a Comment